/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2025 03:23 AM
மேலுார் : கீழையூரில் மாவட்ட நிர்வாகம், போலீசார் சார்பில் ஒன்றிணைவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்.ஐ., கிருஷ்ண பாண்டி வரவேற்றார்.
கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு குறித்து கிராம கலை குழுவினர் மற்றும் லதா மாதவன் மாணவர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் செந்தாமரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ராமகிருஷ்ணன், இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர் பாண்டியராஜா, உதவி கமிஷனர் (கலால்) ராஜகுரு, டி.எஸ்.பி., சிவகுமார், லதா மாதவன் சேர்மன் மாதவன், வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சரவணரவி நன்றி கூறினார்.