நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் இறையன்பு நுாலகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டு விழா, விருது வழங்கும் விழா நடந்தது.
நுாலக நிறுவனர் பார்த்தசாரதி வரவேற்றார்.
தேசிய விமானவியல் ஆய்வகங்களின் முன்னாள் முதன்மை தொழில்நுட்ப வல்லுநர் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இஸ்ரோ விஞ்ஞானி வெங்கட்ராமன், ஆசிரியர் பரிமளாவுக்கு இறையன்பு விருது வழங்கினார். தமிழாசிரியர்கள் மணிகண்டன், சுபா அபிராமி தொகுத்து வழங்கினர். மாவட்ட தொல்காப்பிய மன்றத் தலைவர் இருளப்பன், துளிர் இல்லம் ஒருங்கிணைப்பாளர் காமேஷ், அன்னை வசந்தா டிரஸ்ட் செயலாளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

