/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தரமின்றி பாதாள சாக்கடை பணிகள் குடியிருப்போர் சங்கம் புகார்
/
தரமின்றி பாதாள சாக்கடை பணிகள் குடியிருப்போர் சங்கம் புகார்
தரமின்றி பாதாள சாக்கடை பணிகள் குடியிருப்போர் சங்கம் புகார்
தரமின்றி பாதாள சாக்கடை பணிகள் குடியிருப்போர் சங்கம் புகார்
ADDED : ஜன 03, 2026 05:24 AM
மதுரை: மதுரை மாநகராட்சி 8-வது வார்டு யாதவா கல்லுாரி எதிரே வ.உ.சி. நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் பிரகாஷ், செயலாளர் சிவநாராயண பாண்டியன் சார்பில் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார்:
இப்பகுதியில் செப்டம்பரில் பாதாளச் சாக்கடை பணி துவங்கி தரமின்றியும் மெதுவாகவும் நடக்கிறது. பணி முடிந்த தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. ரோடுகள் குண்டும், குழியு மாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
இப்பகுதியில் 2 மாதங்களாக சரிவர குப்பை சேகரிக்கவில்லை. காலி மனைகளில் குவிக்கப்படுகிறது. நகரில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தினசரி குப்பைகளை அகற்ற வேண்டும். இப்பகுதி மேனேந்தலில் சுடுகாடு உள்ளது.
அங்கு மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையை உரமாக மாற்றும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை குவிக்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களுக்கு சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

