ADDED : ஜூலை 12, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 'மொழி ஞாயிறு' தேவநேயப்பாவாணர் நுாலகத் திறப்பு விழா ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தெய்வகன்னி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை கனகலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார்.
நுாலகத்தை புலவர் சன்னாசி திறந்து வைத்து, பாவாணர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறித்து பேசினார். பாவாணரின் நுால்களை அவரது பேரன் சீவாப்பாவாணர் என்ற சோழன் நன்கொடையாக வழங்கினார். வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார். தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, கவிஞர் மூரா, அக்ரி ஆறுமுகம், காப்பாளர் சங்கரசபாபதி, தமிழாசிரியர்கள் முருகேசன், மணி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.