ADDED : ஜூலை 26, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாடக்குளம் தானத்தவம் புதுார் ஜெயக்குமார் 23. இவரை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்பகையால் 2023 ல் அதே பகுதி சோணைராஜ் 42, கொலை செய்தார்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சோணைராஜிற்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.