/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளத்திற்குள் சென்ற மந்தையை உயர்த்துங்க
/
பள்ளத்திற்குள் சென்ற மந்தையை உயர்த்துங்க
ADDED : செப் 29, 2025 05:07 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே கீழப்பெருமாள்பட்டியில் பள்ளமான மந்தையை உயர்த்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி கருப்பாயி கூறியதாவது:: இங்கு நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஊர் நுழைவாயிலில் நாடக மேடை, கிராம சாவடி அருகே மந்தை உள்ளது. சுற்றிலும் ரோடு அமைத்தபின், மேடாக மாறிவிட்டதால் மந்தை பள்ளமாகிவிட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. தண்ணீர் செல்ல வழியின்றி வெயிலடித்து காயும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வழியே ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். தேங்கிய தண்ணீரால் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மந்தையை உயர்த்த வேண்டும் என்றார்.