/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம் சாண்ட் மணலுக்குள் மதுபாட்டில்கள்
/
எம் சாண்ட் மணலுக்குள் மதுபாட்டில்கள்
ADDED : ஜூன் 08, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி, எழுமலை, உத்தப்பநாயக்கனுார், வாலாந்துார், செக்கானுாரணி பகுதிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு சோதனை நடந்தது.
டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுக்களாக கிராமம் கிராமமாகச் சென்று கடைகள், வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரிடம் விசாரணை நடக்கிறது.
உசிலம்பட்டி நந்தவனம் தெருவில் எம் சாண்ட் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.