/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவ.23, 24ல் குழந்தைகளுக்கான இலக்கியத் திருவிழா
/
நவ.23, 24ல் குழந்தைகளுக்கான இலக்கியத் திருவிழா
ADDED : நவ 21, 2024 04:47 AM
மதுரை: மதுரையில் டர்னிங் பாயின்ட் புக் ஸ்டோர் சார்பில் குழந்தைகளுக்கான இலக்கியத் திருவிழா விராட்டிபத்து ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியில் நவ.23, 24 ல் நடக்கிறது.
புக் ஸ்டோர் நிறுவனர் சூரிய பிரீத்தி கூறியதாவது: அலைபேசி பயன்பாடு, ஏ.ஐ., தொழில் நுட்பம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டு வரவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலக்கியத் திருவிழா டர்னிங் பாயின்ட் புக் ஸ்டோர் சார்பில் 2019 முதல் நடத்தப்படுகிறது. இது, 4வது திருவிழா.
இரண்டு நாள் நிகழ்வுகளும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் துவக்கி வைக்கிறார். ஓம் சாதனா பள்ளி முதல்வர் பரமகல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குழந்தைகளை மையமாக கொண்டு 45க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 20க்கும் மேற்பட்டோர் பேசுகின்றனர்.
நான்கு வகை பயிலரங்குகள், கதை சொல்லும் நிகழ்ச்சி, கதை எழுதுவோர், குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதுவோரின் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இத்திருவிழாவில் நடக்கின்றன. அனுமதி இலவசம் (பயிலரங்கு தவிர). மேலும் விபரங்களுக்கு 0452 - 4200 256ல் தொடர்புகொள்ளலாம் என்றார்.