ADDED : ஆக 27, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ஆந்திர இலக்கிய நண்பர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ‘தமிழகத்திற்கு இலக்கிய பயணம்’ என்ற இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவிந்தராஜ் எழுதிய ‘கடவுளராகும் கற்கால ஆயுதங்கள்’ என்ற தமிழ்க் கவிதை நுால், மல்லவரப்பு பிரபாகர ராவ் எழுதிய ‘தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்தின் தாக்கம்’ என்ற தெலுங்கு நுால்கள் வெளியிடப்பட்டன. விமர்சனம், கலந்துரையாடல் நடந்தது. மோகன், ஜோதிலட்சுமி நன்றி கூறினர்.
ஆந்திர எழுத்தாளர்கள் அஜய் மெடிப்பல்லி, ஸ்வர்ண குருப்பா ராவ், மலகொண்டைய, தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காந்திதுரை பங்கேற்றனர்.
