ADDED : ஜன 20, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரையில் கால்நடை கணக்கெடுப்புப்பணி மற்றும் மாதிரி வரைவு திட்ட பணிகளை கூடுதல் இயக்குநர் (சிறப்பு திட்டம்) நவநீதகிருஷ்ணன்ஆய்வு செய்தார்.
மதுரை மாடக்குளம், முத்துப்பட்டியில் கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த விபரங்களைஅவர் கேட்டறிந்தார். ஊமச்சிகுளம், திருப்பாலையில் மாதிரி வரைவு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுப்பையன், துணை இயக்குநர் நந்தகோபால், உதவி இயக்குநர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.