ADDED : நவ 14, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே மருத்துவமனை, ரயில்வே திருமண மண்டபம், ஓய்வூதியர் நலச்சங்க அலுவலகம் ஆகிய இடங்களில், ரயில்வே ஓய்வூதியர்களுக்கு மின்னணு முறையில் வாழ்வு நிலை சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
முதுநிலை கோட்ட நிதி மேலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். 'ஜீவன் பிரமான்' என்ற அலைபேசி செயலி மூலம் ஆதார் முக அடையாளங்களைக் கொண்டு, 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் வாழ்வு நிலை சான்றிதழைசமர்ப்பித்தனர்.கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவிக்கோட்ட நிதி மேலாளர் கோபிநாத் பங்கேற்றனர். நவ., 14 (இன்று) ராமநாதபுரம், நவ.,17ல் விருதுநகர், நவ., 18ல் திருநெல்வேலியில் இம்முகாம் நடக்கிறது.

