ADDED : செப் 18, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி மெயின் அலுவலக வளாகத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் திட்ட அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் செப்.21, 22ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இதில், மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டை, அது இல்லாதோர் தாங்கள் வியாபாரம் செய்யும் இடம் அடங்கிய புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதார் அட்டை, மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம் என கமிஷனர் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.
