தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாற்று பயிர் சாகுபடிக்கு மானியம்

மாற்று பயிர் சாகுபடிக்கு மானியம்

மாற்று பயிர் சாகுபடிக்கு மானியம்


ADDED : செப் 18, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறுகிய காலப்பயிர்களான சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியம் அல்லது உளுந்து, பாசிப்பயறு, தட்டை உள்ளிட்ட பயறுவகைகளை சாகுபடி செய்யலாம்’’ என வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 3 நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. குறைவான மழை பெய்தாலும் குறுகிய காலப்பயிர்களான சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியப்பயிர்கள் அல்லது உளுந்து, பாசிப்பயறு, தட்டை உள்ளிட்ட பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.

சிறு தானிய இயக்கம் திட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் மாற்றுப்பயிராக சோளம் சாகுபடி செய்வோருக்கு விதை, நுண்ணுாட்ட உரம், திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ் உள்ளிட்டவற்றுடன், அறுவடை கூலி மானியமும் சேர்த்து, ஏக்கருக்கு ரூ.1,250 மானியம் வழங்கப்படும். குறுந்தானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க குதிரைவாலி விதை ‘மினி கிட்’ இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் வரகு, தினை, குதிரைவாலி போன்ற குறுந்தானியப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடை நேர்த்தி செலவுக்காக எக்டேருக்கு ரூ. 8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் இத்தகைய மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்து பயன் பெறலாம். ஆர்வமுள்ளோர் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தக நகலுடன் திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us