ADDED : செப் 18, 2026 06:12 PM
மதுரை: மதுரையில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) சார்பில் போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓபன்லைன் கிளைச் செயலாளர் சேதுக்கரை தலைமை வகித்தார். உதவித்தலைவர் திருமலை அய்யப்பன் ஜோனல் முன்னிலை வகித்தார்.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் கணக்கிட ரூ.7 ஆயிரம் உச்சவரம்பை நீக்குதல், மங்களூரை தெற்கு ரயில்வேயிலிருந்து தனியாக பிரிக்கக் கூடாது. தனியார்மயம், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உதவி பொதுச்செயலாளர் சிவக்குமார், கோட்டச் செயலாளர் கார்த்திக் சங்கிலி, சங்க நிர்வாகிகள் ஜெயராஜசேகர், ஹரிகுமார், சரவணன், செல்வகுமார், ஜெயராமன், டி.ஆர்.பி.யூ.,கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர். மதுரை பொதுக்கிளை, ஓபன் கிளை, கோட்ட அலுவலக கிளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
