நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கான கடன் வழங்கும் முகாம் மதுரை மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.
மைய பொது மேலாளர் கணேசன் தலைமை வகித்தார். நிலைய இயக்குநர்கள் பாலாஜி, சுந்தராச்சாரி முன்னிலை வகித்தனர். பயிற்சி பெற்ற பெண்கள் சான்றிதழுடன் மையம் வந்து சுயதொழில் கடன் பெறுவதற்கான முகாமில் பங்கேற்றனர்.