ADDED : செப் 21, 2024 05:50 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக (டாம்கோ) கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 'டாம்கோ' தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா உதவிகளை வழங்கினார். ரூ.13.5 லட்சம் மதிப்பில் 8 பேருக்கு கடனுதவிகள், 18 பேருக்கு சிறுபான்மையினர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அவர் பேசியதாவது:
டாம்கோ மூலம் காலக்கடன், விராசட் கடன், மைக்ரோ நிதி, கல்விக்கடன் என நான்கு வகை கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினரிடம் இக்கடன் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கான நலவாரியத்தில் உறுப்பினராக பதவி செய்வதன் மூலம் இத்திட்டங்களை எளிதில் பெறலாம் என்றார்.
இதில் டாம்கோ மேலாண்மை இயக்குனர் ஆசியாமரியம், கலெக்டர் சங்கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குருமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.