ADDED : டிச 15, 2024 05:29 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்ற லோக் அதாலத்தில் 6669 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.38 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 802 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லோக் அதாலத் நடந்தது. நிர்வாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிபதிகள் ஆர்.கலைமதி, பி.வடமலை, என்.செந்தில்குமார், ஆர்.பூர்ணிமா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மோகன்தாஸ், சடையாண்டி, சிவ சுப்பிரமணியன், பூபாலன், வழக்கறிஞர்கள் சாமிதுரை, பாலசுப்பிரமணியன், கிருஷ்ணவேணி, வெங்கடேசன், டாக்டர் ரவிச்சந்திரன் விசாரித்தனர். 386 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. 30 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.3 கோடியே 90 லட்சத்து 9 ஆயிரத்து 55 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் (நீதித்துறை) அப்துல் காதர் ஏற்பாடு செய்திருந்தார்.
மதுரை நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் லோக்அதாலத் நடந்தது. மாவட்ட அளவில் 25 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி நீதிமன்றங்களில் 6670 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் செங்கமலச்செல்வன், நாகராஜன், அல்லி, ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதிகள் காயத்ரி தேவி, சந்தான குமார், ராம் கணேஷ் விசாரித்தனர். 6639 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.34 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரத்து 747 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதில் 318 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. 36 சிவில், 78 காசோலை மோசடி வழக்குகள், 19 குடும்பநல வழக்குகளில் தம்பதியினரிடையே சமரசம் ஏற்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவண செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.