ADDED : ஜூலை 31, 2026 12:34 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் அருகே உள்ள டி.வளையங்குளத்திற்கு தேங்காய் சிரட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது.
கப்பலுார் காலனி பஸ் ஸ்டாப் அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் லாரி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் தேங்காய் சிரட்டைகள் ரோடு முழுவதும் சிதறின. லாரியில் டிரைவர் மற்றும் 6 பெண்கள் வந்தனர். இதில் சிவகங்கையைச் சேர்ந்த இந்திராணி 48, என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை மீட்பு படையினர் லாரியை மீட்டு, தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்தினர்.
