/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனை முன் ஒலிபெருக்கியால் தொல்லை
/
அரசு மருத்துவமனை முன் ஒலிபெருக்கியால் தொல்லை
ADDED : மார் 21, 2025 04:05 AM
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனை முன்பு ஒலிபெருக்கி மூலமும், சாலையோர கடைகளில் கூவி கூவியும் காய்கறி வியாபாரம் செய்வதால் நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலுாரில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி, உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை முன்புள்ள ரோட்டை ஆக்கிரமித்தும், வேனில் ஒலிபெருக்கி மூலமும் ஏராளமானோர் வியாபாரம் செய்கின்றனர். காய்கறிகளை வாங்கும்படி பொதுமக்களை சத்தமாக அழைப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ், நோயாளிகள், டாக்டர்கள் எளிதாக சென்று வரமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நோயாளிகள் கூறியதாவது:
மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் முன் போட்டி போட்டு கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தமாக வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சத்தத்தால் மன உளைச்சல் ஏற்படுவதுடன், துாங்கவும் முடியவில்லை.
இரவு நெருங்கியதும் மீதமுள்ள காய்கறிகளை அப்படியே போட்டு செல்வதால் அழுகி துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.