ADDED : பிப் 14, 2024 05:58 AM

'நாங்கள் சந்தித்த முதல் நாளே காதல் அரும்பியது. பள்ளி பருவத்தில் தொடங்கிய காதல், காலங்கள் செல்ல செல்ல கற்பாறையில் எழுதிய காவியம் போல் மாறிவிட்டது' என்கின்றனர் பழநியை சேர்ந்த ராஜ்வினோத், பிரியா தம்பதியினர்.
அவர்கள் கூறியது:
கல்லுாரி முடித்து பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்தோம். இருவரும் வேலைக்குச் சென்று அவரவர் குடும்பத்தைப் பார்த்து வந்தோம். 2020ல் பெற்றோரின் சம்மத்தோடு திருமணம் செய்து கொண்டோம். இன்றோடு எங்களின் காதல் பயணம் தொடங்கி 13 ஆண்டுகளை எட்டி விட்டது.
பல சண்டைகள், சமாதானங்கள், வருத்தங்கள் என வந்தாலும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை, சந்தேகப்பட்டுக் கொண்டதில்லை. தனித்துவமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் எந்தவித ஒளிவுமறைவும் எங்களுக்குள் இல்லை. காதலிக்கும் போதும் சரி திருமணத்திற்கு பிறகும் சரி தற்போதுவரை அந்த வெளிப்படைத்தன்மை இருப்பதுதான் எங்களுக்குள்ளான அன்பின் ஊற்று. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதாலும் காதல் கல்யாணம், காவியமாக தெரிகிறது. எங்களுக்கென ஒரு வாரிசுடன் அடுத்த தலைமுறை வந்துவிட்டது.
-

