ADDED : மே 27, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரம் மேற்கு தெரு குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
அன்னம்மாள் கூறியதாவது: ஏராளமானோர் இப்பகுதியில் வசிக்கிறோம். தரையில் இருந்து குறைந்த உயரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. மழைக்காலங்களில் அடிக்கடி அறுந்து விழுகின்றன.
பழைய டிரான்ஸ்பார்மரில் இருந்து வேறு வழியாக இக்கம்பிகள் சென்றன. புது டிரான்ஸ்பார்மரில் இணைப்பு கொடுத்த பின்பு இந்த வழியாக தாழ்வாக செல்கிறது. இதனை சரிசெய்ய பலமுறை கோரிக்கை விடுத்தோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.