/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம் சாண்ட், ஜல்லிக்கு இணையதள அனுமதி
/
எம் சாண்ட், ஜல்லிக்கு இணையதள அனுமதி
ADDED : ஜூன் 14, 2025 05:25 AM
மதுரை: 'எம் சாண்ட், ஜல்லியை குவாரியில் இருந்து கொண்டு செல்வதற்கான அனுமதியை இன்று (ஜூன் 14) முதல் இணையதளம் மூலம் பெறலாம்' என மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கிரஷர், குவாரி உரிமையாளர்கள் எம் சாண்ட் மணல், ஜல்லியை சேமிக்கவும், விற்பனை நிலையம் அமைக்கவும் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி செல்லும் போது இணையவழி நடைச்சீட்டு பெறும் முறை இன்று (ஜூன் 14) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நடைச்சீட்டை www.mimas.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து, இலவச பாஸ் பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.