/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2025 01:01 AM

மதுரை; தி.மு.க., அரசு அறிவித்த மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மதுரை செல்லுாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு பகுதிச் செயலாளர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். மாநில குழு நிர்வாகி விஜயராஜன், வடக்கு 2ம் பகுதி பாலு, மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் நரசிம்மன், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் ஜூலை 1 முதல் 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 முதல் 41 காசு வரை உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின்கணக்கீடு முறையை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.