sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை- சினிமா- 09.07

/

மதுரை- சினிமா- 09.07

மதுரை- சினிமா- 09.07

மதுரை- சினிமா- 09.07


ADDED : ஜூலை 09, 2025 07:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹீரோயின் ஆன இன்னொரு டாக்டர்

நடிகைகள் சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் டாக்டருக்கு படித்துவிட்டு நாயகிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் வரிசையில் சிந்து பிரியா என்பவர் நாயகியாகி உள்ளார். டாக்டரான இவர் தற்போது கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'இவன் தந்திரன் 2' படத்தில் சரண் ஜோடியாக நடிக்கிறார். இவர் இதற்குமுன் 'தலைமை செயலகம்' வெப்சீரிஸில் சிறு வேடத்தில் நடித்தார். தற்போது மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்

ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரமான ஜூலை 10ல் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடித்த 'ப்ரீடம்' படம் வெளியாகிறது. இலங்கை அகதிகளைப் பற்றிய படம். இவை தவிர்த்து ஜூலை 11ல் விமலின் 'தேசிங்கு ராஜா 2', வனிதா இயக்கி, நடித்துள்ள 'மிசஸ் அண்ட் மிஸ்டர்', விஷ்ணு விஷால் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள 'மாயக் கூத்து' ஆகிய 5 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன.

25 ஆண்டுகளுக்கு பின் மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம்

மலையாள நடிகரான ஜெயராம் தமிழ், தெலுங்கிலும் நடிக்கிறார். தற்போது தனது மகன் காளிதாஸ் உடன் இணைந்து 'ஆசைகள் ஆயிரம்' என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இதை பிரஜித் இயக்குகிறார். இதன் முதல்பார்வை வெளியாகி உள்ளது. 2000ல் ஜெயராம் நடித்த 'கொச்சு கொச்சு சந்தோசங்கள்' படத்தில் சிறுவயது ஜெயராமாக காளிதாஸ் நடித்தார். அதன்பின் 25 ஆண்டுகளுக்கு பின் இப்போது தனது தந்தையுடன் நடித்துள்ளார்.

விரைவில் 'லக்கி பாஸ்கர் 2'

'வாத்தி, லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லுாரி தற்போது சூர்யாவின் 46வது படத்தை இயக்குகிறார். வெங்கி கூறுகையில், ''சூர்யா படம், நல்ல குடும்ப படமாக இருக்கும். வாத்தி படம் தனிக்கதையாக இருக்கணும் என தனுஷ் விரும்பியதால் அதன் 2வது பாகம் உருவாகாது. ஆனால் லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் உருவாகும். கதை தயாராகவில்லை. நானும், துல்கரும் பிஸியாக இருக்கிறோம். கொஞ்ச காலம் ஆகும்'' என்றார்.

தெலுங்கானாவில் ஸ்டுடியோ அமைக்க அஜய் தேவ்கன் ஆர்வம்

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்றவைதான் திரைப்படத் தயாரிப்புகளுக்கான முக்கிய நகரங்களாக இருந்தன. இன்றைக்கு தென்னிந்திய சினிமாவை பொருத்தமட்டில் சென்னையை பின்னுக்கு தள்ளி ஐதராபாத் முன்னேறியது. அங்கு தான் பல முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அவரிடத்தில் தெலுங்கானாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படத் துறையை வளர்ப்பதில் தனது அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.

அம்மாவாக நடிப்பது பெருமை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் வெற்றி பெற்றது. இதில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்ததோடு, 4 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார். ஐஸ்வர்யா கூறுகையில், ''குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். ஒரு நடிகை எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கணும். அதற்கு வயது தடையாக இருக்கக் கூடாது. 'சங்கராந்திகி வஸ்துன்னம் 2' எடுத்தால் அதில் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்தார்'' என்றார்.






      Dinamalar
      Follow us