ADDED : ஜூலை 14, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கொட்டுக்காளி' நாயகியின் அடுத்த படம்
மலையாள நடிகை அன்னா பென், 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவரது நடிப்பு பாராட்டை பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'நாய் சேகர்' படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நாயகனாக நடிக்கிறார். காதலும், நகைச்சுவையும் கலந்து ஜோடி பொருத்தம் பற்றிய கதையில் இப்படம் உருவாகிறது.