ADDED : செப் 15, 2026 01:12 AM
லோகேஷ் படத்தை கைவிட்ட அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை எடுக்க திட்டமிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது கதை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக தாமதமானது. இந்த நிலையில் இப்படத்தை கைவிட்ட அமீர்கான், இயக்குனர் ஆர்.பால்கி உடன் வேறொரு சூப்பர் ஹீரோ படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
நவ.6ல் 'மூக்குத்தி அம்மன்-2' ரிலீஸ்
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இதன் டீசர் 'மஹாசக்தியின் எழுச்சி' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. புராண பின்னணியையும், தற்போதைய கால கட்டத்தையும் இணைப்பது போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மக்களின் நம்பிக்கையாகவும், தீமையை எதிர்கொள்ளும் தெய்வீக சக்தியாகவும் நயன்தாரா கதாபாத்திரம் அமைந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ.6ல் ரிலீசாகிறது.
அஜித்துக்கு 'மினியேச்சர்' ரேஸ் கார் பரிசு
லண்டனில் நடந்த கார் ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அஜித் அணி 38வது இடம் பிடித்தது. போட்டிக்கு முன்பாக அஜித்தை சந்தித்த விஜய், அவரது ரேஸ் காரின் மினியேச்சர் மாடலை பரிசாக அளித்தார். அதில் 'என் அன்பான சகோதரர் அஜித்துக்கு' என குறிப்பிட்டு 'பிரியமுடன் விஜய்' என ஆட்டோகிராப் போட்டுள்ளார். அஜித்தும் தன் ஹெல்மெட்டை விஜய்க்கு பரிசாக அளித்தார். இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
''பண்பாடு என்பது...'': கொதித்த ஐஸ்வர்யா லக ் ஷ்மி
நடிகை ஐஸ்வர்யா லக் ஷ்மி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் அணிந்திருந்த உடையை பலரும் விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா லக் ஷ்மி, ''பண்பாடு என்பது ஒரு பெண்ணின் ஆடையிலோ, உடல் அமைப்பிலோ மட்டும் இல்லை. நாம் பிறரிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் இருக்கிறது. என் ஆடையை பற்றி மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கிறீர்கள்... ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே கடந்தாலும், நேரம் செல்லச் செல்ல, அது எத்தகைய விவாதமாக உருவெடுத்தது என்பதை பார்க்கையில் அதிர்ச்சியாக உள்ளது'' என்றார்.
ராமர், சீதா முதல் பார்வை வெளியீடு
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதில் ஒரு வனத்தில் சீதாவுக்கு ராமர் பூச்சூடும் போஸ்டரை வெளியிட்ட படக்குழு அத்துடன் 'ஜெய் ஜெய் ராம்' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான், ஹன் ஜிம்மர் இசையில் குமார் விஷ்வாஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங் பாடியுள்ளனர்.
சூரியின் 'மண்டாடி' ரூ.50 கோடி வசூல்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் நடித்த 'மண்டாடி' படத்திற்கு தமிழ், தெலுங்கில் வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாட்கள் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் வசூலும் அதிகரித்து ரூ.50 கோடியை கடந்துவிட்டதாம். இப்படத்துடன் வெளியான கார்த்தியின் 'சர்தார் 2' நெகட்டிவ் விமர்சனங்களால் வசூலில் தத்தளித்து வருகிறது.
