ADDED : செப் 15, 2026 01:10 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: இரும்பாடி பஸ்ஸ்டாப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. வலிமையிழந்து காலாவதியாகி விட்டதால் கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்தும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் உள்ளது. தற்போது போஸ்டர் ஒட்டவும், வாகனங்கள் நிறுத்தவும் மட்டுமே பயன்படுகிறது. பயணிகள் மழை, வெயிலுக்கு வெளியே நின்று அவதியுறுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
