ADDED : ஜூலை 19, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் இணைந்த 'பிளாக்' கூட்டணி
கடந்த ஆண்டு கே.ஜி.பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் 'பிளாக்'. ஹாரர் கலந்த திரில்லராக வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் பாலசுப்ரமணியம் இயக்கத்தில் ஜீவா தனது 46வது படத்தில் நடிக்கிறார். நாயகிகளாக ரபீயா கட்டோன், நைலா உஷா என இருவர் நடிக்கின்றனர். இதுவும் வித்தியாசமான கதையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது.