ADDED : செப் 25, 2026 05:12 AM
அப்பாவை வைத்து
ஜாலியாக ஒரு படம்:- ஜேசன் ஆசை
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்துள்ள 'சிக்மா' படம் அக்., 2ல் ரிலீஸாகிறது. தன் தந்தையை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் அது எந்தமாதிரி இருக்கும் என ஜேசன் கூறுகையில், ''அப்பாவிற்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அவரிடம் நிறைய நகைச்சுவை உணர்வு உள்ளது. அதை வைத்து ஜாலியான ஒரு படத்தை எடுப்பேன்'' என தெரிவித்துள்ளார்.
'கம்பேக்' தரும் கார்த்திகேயா
'ஆர்.எக்ஸ் 100' படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தமிழில் அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்தார். சிறுஇடைவெளிக்கு பின் அவர் நடிக்கும் படம் 'கம் பேக்'. இதை அவரே இயக்கவும் செய்து தயாரிக்கிறார். அதிரடி ஆக் ஷன் கதையில் குத்துச்சண்டை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாக்ஸராக நடிக்கும் இவர் இதற்காக நீண்ட பயிற்சியும் எடுத்துள்ளார். அடுத்தாண்டு ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.
