/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருதுபாண்டியர்களுக்கு மதுரை ஆதினம் புகழாரம்
/
மருதுபாண்டியர்களுக்கு மதுரை ஆதினம் புகழாரம்
ADDED : அக் 28, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் கூறியதாவது: மருது பாண்டியர்கள், எங்கள் மடத்தின் சீடர்கள். இந்திய சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள். அவர்களது நினைவை உலகமே போற்றி வணங்குகிறது. இன்றைய இளைஞர்கள் அவர்களை மறக்கக்கூடாது. மருது சகோதரர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை இளைஞர்கள் போற்ற வேண்டும் என்றார்.

