/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை ஏர்போர்ட்
/
இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை ஏர்போர்ட்
இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை ஏர்போர்ட்
இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை ஏர்போர்ட்
ADDED : அக் 01, 2024 05:57 AM

மதுரை: மதுரை விமான நிலையம் தினமும் காலை, 7:10 மணி முதல் இரவு, 8:55 மணி வரை செயல்படுகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பைக்கும், இலங்கை, சிங்கப்பூர், துபாய் உட்பட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன.
விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற, பலதரப்பினரும் வலியறுத்தினர். சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
பெரிய விமானங்கள் வந்திறங்கும் வகையில் ரன்வேயின் நீளம் 2 கி.மீ., தொலைவுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. கூடுதல் டெர்மினல்கள், 24 மணி நேரமும் செயல்படுவது என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், 24 மணி நேரமும் செயல்படுவது என்பதை, அக்., 1 முதல் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்துகிறது.
பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கூடுதலாக, 54 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய ஊழியர்கள் கூடுதலாக தேவை என்பதால், திருவனந்தபுரம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் பலர் இங்கு வரவழைக்கப்படுகின்றனர்.
எந்தெந்த நிறுவனங்கள் இரவு நேர விமானத்தை இயக்க உள்ளன என, இதுவரை தகவல் இல்லை. இந்த நடவடிக்கைகள் முழுமையடைய சில நாட்கள் ஆகலாம். எனினும், அக்., 15க்கு பின் விமானங்கள் வருகை, நிலையத்தின் மற்ற செயல்பாடுகள் முழு நேரமும் செயல்படும் என, எதிர்பார்க்கலாம். விமான நிலைய ஆணையத்தின் சேர்மன் சுரேஷ் இன்று, மதுரையில் நடைபெறும் விழாவில் 24 மணி நேர செயல்பாட்டை துவக்கி வைக்கிறார்.