/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பால் பொலிவிழந்த மூலிகைப்பூங்கா மதுரை அண்ணாநகரில் அவலம்
/
சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பால் பொலிவிழந்த மூலிகைப்பூங்கா மதுரை அண்ணாநகரில் அவலம்
சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பால் பொலிவிழந்த மூலிகைப்பூங்கா மதுரை அண்ணாநகரில் அவலம்
சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பால் பொலிவிழந்த மூலிகைப்பூங்கா மதுரை அண்ணாநகரில் அவலம்
ADDED : ஏப் 21, 2025 06:18 AM

மதுரை: மதுரை அண்ணாநகரை உருவாக்கியபோது, மூலிகைப் பூங்காபராமரிப்பில்லாமல் சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதி 1975 ல் உருவானபோது, நுாலகம், சர்வமத கோயில்கள், கல்லுாரி, பள்ளி, குறைந்த, உயர் வருவாய் குடும்ப குடியிருப்புகள், பூங்கா என பொது பயன்பாடுகளுக்கும் இடம் ஒதுக்கி நிர்மாணித்தனர். இதில் 65 சென்ட் நிலத்தில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டது. நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பூங்காவில், லாரிகளை நிறுத்தி வைப்பது, சமூகவிரோத செயல்களால், பொதுமக்களின் பயன்பாடு குறைந்தது. 2012ல் மதுரை வந்த சட்டசபை மனுக்கள் குழு இப்பூங்கா குறித்த புகார்களின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்தது.
பூங்காவை பராமரித்து மேம்படுத்த ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியது. இதன்பின் பூங்காவில் வேலி, மரக்கன்றுகள், பூஞ்செடிகள் அமைத்தனர். அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகியான வனஅதிகாரி ராஜ்குமார் தலைமையில், மேகமலையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட சந்தனம், தேக்கு, கடம்பு, அதிமதுரம், மந்தாரை, கருந்துளசி, நிலவேம்பு, மலைவேம்பு என அரியவகை மூலிகைகள், மரக்கன்றுகளை நட்டனர்.
2014ல் வனத்துறை பயிற்சி பெற்ற 42 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் குழுவும் இந்த பூங்காவை பார்வையிட்டு வியந்தது. இந்நிலையில் மீண்டும் சமூகவிரோதிகள் பூங்காவிற்குள் முகாமிடத் துவங்கினர். இந்நிலையில் கடந்தாண்டு ஜூலையில் மாநகராட்சி சார்பில் 4 பூங்காக்களை சீரமைக்க ரூ.72 லட்சம் ஒதுக்கி, இந்தப் பூங்காவுக்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதில் வேலி, விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். ஆழ்துளை கிணறு அமைப்பதாகக் கூறி அவர்களின் வாகனங்கள் வந்து சென்றதில், பாதுகாப்பு வேலியும் பாழ்பட்டது. பணிகள் முடிந்தபின்னும் அவர்கள் எதையும் சரிசெய்யவில்லை. பூங்காவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதும் செயின் பறிப்பு, கஞ்சா விற்போர் உட்பட சமூகவிரோதிகள் கூடுகின்றனர். மூலிகை மரக்கன்றுகள் பாழாகும் நிலை உள்ளது. பூங்கா அமைத்ததன்நோக்கமே மாறிவிட்டது.
குடியிருப்போர் சங்க ஆலோசகர் முத்துக்குமார் கூறுகையில், ''மூலிகைப் பூங்கா இப்பகுதிக்கு பேருதவியாக இருந்தது. தற்போது சமூகநல விரோதிகள் கூடுமிடமாகி யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமீபத்தில் ஒருவர் இங்கு தற்கொலை செய்து கொண்டதும் நடந்துள்ளது.
சங்க நிர்வாகிகளிடம் இருந்த பூங்கா சாவியை மாநகராட்சியின் பெற்றுச் சென்றுள்ளனர். இப்பூங்காவை உடனே சீரமைக்க வேண்டும்'' என்றார்.

