/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை பா.ஜ.,வில் அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிப்பு நிர்வாகிகள் பட்டியல் வெளியீட்டில் அதிருப்தி

ADDED : செப் 30, 2025 04:21 AM
மதுரை: மதுரை நகர் பா.ஜ.,வில் பல்வேறு அணிகள், பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அண்ணாமலை ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
நயினார் நாகேந்திரன் தலைவரான பின்பு மாநில நிர்வாகிகள் சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட அண்ணாமலை ஆதரவாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாவட்ட அளவிலும் அதேநிலை உள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மதுரை நகர் பா.ஜ.,வின் பல்வேறு அணிகள், பிரிவுகளுக்கு முறையே தலைவர்கள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நகர் தலைவர் மாரிசக்ரவர்த்தி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.
இளைஞரணி-க்கு அருண்பாண்டியன், மகளிரணி சுகப்பிரியா, விவசாய அணி துரை பாஸ்கர், பட்டியல் அணி அலெக்ஸ்பாண்டியன், பழங்குடியினர் அணி முருகன், ஓ.பி.சி., அணி உதயசுந்தர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரிவுகளைப் பொறுத்தளவில் சமூக ஊடகப்பிரிவுக்கு கிரண்ராஜ், தகவல்தொழில்நுட்ப பிரிவு ஜெயதேவபாண்டியன், ஊடகம் எம்.ஜி.ராம்குமார், வழக்கறிஞர் பிரிவு ரமேஷ்குமார் உட்பட 28 பிரிவுகளுக்கு பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணிகள், பிரிவுகளில் இருந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.