/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடைக்கானலில் மதுரை கவுன்சிலர்கள் தாராள சலுகைகளால் ஆர்வம்
/
கொடைக்கானலில் மதுரை கவுன்சிலர்கள் தாராள சலுகைகளால் ஆர்வம்
கொடைக்கானலில் மதுரை கவுன்சிலர்கள் தாராள சலுகைகளால் ஆர்வம்
கொடைக்கானலில் மதுரை கவுன்சிலர்கள் தாராள சலுகைகளால் ஆர்வம்
ADDED : மார் 18, 2025 05:51 AM
மதுரை: மதுரையில் 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஆளுமை திறமை மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்க நேற்று கொடைக்கானல் கிளம்பி சென்றனர்.
தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், அலுவலக நடைமுறைகள், ஆளுமை திறமைகளை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை கவுன்சிலர்களுக்கு 7 நாட்கள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டது.
முதல் இரண்டு பயிற்சிகளில் மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர். கவுன்சிலர் மட்டுமே சொந்த செலவில் வரவேண்டும். ஒரு அறையில் இருவர் தங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் பயிற்சி வகுப்பு காத்தாடியது. பெண் கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக 'இப்பயிற்சி வகுப்புகளில் கவுன்சிலர்களை கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும்' என மாநகராட்சிக்கு நகரியல் நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மண்டலம் 2 (பகுதி), 3, 4, 5 ஆகிய வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பஸ்கள் மூலம் கொடைக்கானல் செல்ல மேயர் இந்திராணி பொன்வசந்த் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கவுன்சிலருடன் கூடுதலாக ஒரு நபர் அழைத்து வரலாம், பிடித்த உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என 'தாராள சலுகைகள்' அறிவிக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர் சென்றனர். இன்றும், நாளையும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.