/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு விதைகள் தயாரிக்கும் பயிற்சி முகாம்
/
விவசாயிகளுக்கு விதைகள் தயாரிக்கும் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 24, 2011 11:49 PM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகாவில் விதை கிராம திட்டத்தின்கீழ், சோளங்குருணி, வலையங்குளம், சின்ன உடைப்பில், விதைகள் தயாரிக்கும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.
அடுத்த பருவத்திற்கான நிலக்கடை விதை தயாரிக்கும் பயிற்சி ஜூலை 26ல் சோளங்குருணியிலும், பயறு வகைகளுக்கான பயிற்சி ஜூலை 27ல் சின்ன உடைப்பிலும், ஜூலை 28ல் வலையங்குளம் சமுதாய கூடத்திலும் நடக்கின்றன. விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். விபரங்களுக்கு விவசாய உதவி இயக்குநர் செல்வன்(94439 30379), துணை அலுவலர் கோவிந்தராஜ்(90039 67594)ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். நெல் விதைகள் தயாரிக்கும் பயிற்சி திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது. இடம் மற்றும் தேதி பின் அறிவிக்கப்படும், என உதவி இயக்குனர் செல்வன் தெரிவித்தார்.

