sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்

/

பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்

பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்

பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்


ADDED : ஜூலை 24, 2011 11:49 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க, கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது'', என கிளை மேலாளர் அருணாச்சல ராஜன் தெரிவித்தார்.



மதுரையில் நேற்று நடந்த கடன் முகாமில் அவர் கூறியதாவது: மாநில அரசின் மூலம் தொழில் துவங்க கடன்களும், மானியமும் வழங்கப்படுகிறது.

25 லட்ச ரூபாய்க்குள், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உற்பத்தி அல்லது சேவைத்தொழில் துவங்கலாம். அதற்கு மேல், அந்தந்த மாவட்டங்களில் துவங்கலாம். உற்பத்தித் தொழிலாக இருந்தால், இயந்திரத்தின் மதிப்பில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு 30 லட்ச ரூபாய்.



பத்து லட்சம் வரை தொழில் துவங்க, 75 சதவீத கடனும், அதற்கு மேல் எனில் மூன்றில் இரண்டு பங்கு தொகை கடனாக தரப்படுகிறது. 50 முதல் 100 சதவீதம் வரை சொத்துப் பிணையம் தேவை. முழுமையான தொழில் அனுபவம் உடையவர்கள் தொழில் செய்ய பணம் தடையாக இருந்தால், 90 சதவீதம் வரை கடன் தரப்படுகிறது. குறைந்தது 25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாய் வரை, சொத்துப் பிணையம் தேவையில்லை. மாதந்தோறும் சமமான தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். மதுரையில் மேற்கு மற்றும் மேலூர் தவிர, பிற இடங்களில் தொழில் துவங்கினால் மானியக் கடன் பெறலாம், என்றார். போன்: 0452 - 253 3331.








      Dinamalar
      Follow us