sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மா சாகுபடியில் 3 மடங்கு வருவாய் பெற யோசனை

/

மா சாகுபடியில் 3 மடங்கு வருவாய் பெற யோசனை

மா சாகுபடியில் 3 மடங்கு வருவாய் பெற யோசனை

மா சாகுபடியில் 3 மடங்கு வருவாய் பெற யோசனை


ADDED : ஜூலை 24, 2011 11:49 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''மா சாகுபடியில் அதிக மகசூலை பெற அதிக இடைவெளி விட்டு நடுவதை தவிர்த்து, அடர் நடவு முறையை பின்பற்றினால் மும்மடங்கு வருவாய் பெறலாம்,'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், மா மரக் கன்றுகளை அடர் நடவு முறையில் 5 மீ.,க்கு 5 மீ., இடைவெளியில் ஒட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி உரமிட அரசு மானியம் வழங்கப்படுகிறது. சரியான கிளை படர்வு மேலாண்மையை பின்பற்றுவது நல்லது. மா சாகுபடியில் கவாத்து, பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அறுவடை காலங்களில் இடைப்பணி செய்வது எளிதாக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அடர் நடவு முறையை நடப்பு ஆண்டில் 400 எக்டேர் மா பயிர் பரப்பு விரிவாக்கத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகள் தேர்வு நடந்து வருகிறது. முதன்முதலாக கொய்யாவில் அடர் நடவு முறையை 10 எக்டேர் பரப்பில் செயல்படுத்தவும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகள் மா மற்றும் கொய்யா அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பங்கள், ஆலோசனைகள் பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், என துணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.










      Dinamalar
      Follow us