sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு

/

பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு

பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு

பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு


ADDED : ஜூலை 24, 2011 11:52 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் ரூ.51 லட்சம் மதிப்புள்ள இடத்தை மிரட்டி அபகரித்ததாக, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), நகர துணைசெயலாளர் உதயகுமார் உட்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமர்நாத். ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். சில ஆண்டுகளுக்கு முன், சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு தொழிற்சாலை நடத்துவதற்காக, 100 ஏக்கர் நலம் தேவைப்படுவதாக அமர்நாத்தை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் அணுகினர். மதுரை பெருங்குடி அருகே சம்பக்குளத்தில் உள்ள அமர்நாத்தின் 40 ஏக்கர் மற்றும் 80 சென்ட் இடத்தை முதற்கட்டமாக பத்திரப்பதிவு செய்ய, மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டது. பத்திரப்பதிவு செய்வதற்கு முதல்நாள் (2009 ஜூலை 14), கோகலே ரோட்டில் உள்ள பொட்டுசுரேஷ் அலுவலகத்தில் தன்னை மிரட்டியும், வீட்டை தாக்கியும் ரூ.51 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக தி.மு.க., நிர்வாகிகள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன் தினம் அமர்நாத் புகார் செய்தார்.



இதன் அடிப்படையில், பொட்டு சுரேஷ், உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி, கே.கே.நகர் தொழிலதிபர் மாணிக்கம், பாலமுருகன், ரவிக்குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 109 (குற்றத்திற்கு உடந்தை), 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 323 (தன்னிச்சையாக காயம் விளைவித்தல்), 506 ( மிரட்டல்) உட்பட 6 பிரிவுகளின் கீழும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணிக்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். முதலாவது மாஜிஸ்திரேட் முத்துக்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். போலீசார் கூறுகையில், ''கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் உதயகுமார், சூடம்மணி பங்கேற்காததால் அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம். மலேசியாவில் சில மாதங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளில் உதயகுமார் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கிறோம்,'' என்றனர்.








      Dinamalar
      Follow us