/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரைகுறையாக உள்ள மாநகராட்சி திட்டங்களை கைவிட வேண்டாம் : அதிகாரிகளுக்கு அறிவுரை
/
அரைகுறையாக உள்ள மாநகராட்சி திட்டங்களை கைவிட வேண்டாம் : அதிகாரிகளுக்கு அறிவுரை
அரைகுறையாக உள்ள மாநகராட்சி திட்டங்களை கைவிட வேண்டாம் : அதிகாரிகளுக்கு அறிவுரை
அரைகுறையாக உள்ள மாநகராட்சி திட்டங்களை கைவிட வேண்டாம் : அதிகாரிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 26, 2011 12:46 AM
மதுரை : 'நிதி நிலைமையை காரணம் காட்டி, அரைகுறையாக உள்ள மாநகராட்சி திட்டங்களை கைவிட வேண்டாம்,' என, மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மாநகராட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மத்திய அரசு 50, மாநில அரசு 30, மாநகராட்சி 20 சதவீதம் பங்களிப்புடன் பணிகளை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கிய நிலையில், மாநகராட்சி தன் பங்களிப்பை செலுத்தவில்லை. 'ஆறாவது ஊதியக்குழுவால், ஊழியர்களின் சம்பளம் உயர்ந்ததாகவும், மாநகராட்சி கடும் வருவாய் நெருக்கடியில் இருப்பதாகவும்,' அதிகாரிகள் காரணம் கூறினர். இதனால், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் போன்ற அத்யாவசியமான திட்டங்கள் 45 சதவீதம் நிறைவேறிய நிலையில், பாதியில் நின்றன. திட்டங்களை நிறைவேற்ற தேவையான 300 கோடி ரூபாய் உதவி கேட்டு, மாநில அரசை மாநகராட்சி அதிகாரிகள் நாடினர்.
பரிசீலித்த அரசு தரப்பு, மாநகராட்சி திட்டங்களுக்கு உதவ முன்வந்துள்ளது. 'நிதியை காரணம் காட்டி, மக்கள் நலத்திட்டங்களை கைவிட வேண்டாம்,' என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் நான்காம்(இறுதி) தவணை தொகையான 105 கோடி ரூபாய் விரைவில் வர உள்ளது. இத்துடன், மாநில அரசின் தயவில் 100 கோடி ரூபாய் கிடைத்தால், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது. இதற்காக அதிகாரிகள் தரப்பிலான 'மூவ்' வேகமாக நடந்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை, நிதியை காரணம் காட்டி நிறுத்த வேண்டாம்,' என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோரிக்கை வைத்த தொகையை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசின் இறுதி தவணைத்தொகை வர உள்ள நிலையில், குறைந்து அளவு மாநில அரசு நிதி கிடைத்தால், முக்கிய திட்டங்களை நிறைவேற்றிவிடலாம், என்றார்.