/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டத்தை மதிக்க வேண்டும் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
/
சட்டத்தை மதிக்க வேண்டும் ஐகோர்ட் நீதிபதி பேச்சு
ADDED : ஜூலை 26, 2011 12:46 AM
நாகமலைபுதுக்கோட்டை : ''அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்,'' என நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதி வி.பெரியகருப்பையா குறிப்பிட்டார்.
இக்கல்லூரியில் 1983-86 ஆண்டுகளில் பி.காம். படித்த முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் கோபிசங்கர் வரவேற்றார். கல்லூரி தலைவர் மகேந்திரவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களின் போட்டோ ஆல்பம், விலாசம், மொபைல் போன் எண் அடங்கிய விழா மலரை வணிகவியல் துறை முன்னாள் தலைவர் நடராஜன் வெளியிட, முன்னாள் பொருளாளர் ஜவஹர் பெற்றுக் கொண்டார்.
ஐகோர்ட் நீதிபதி வி.பெரியகருப்பையா பேசுகையில், ''மாணவர்களின் பின்னணி தற்போது மாறிவிட்டது. குறும்பு செய்யும் குழந்தைகளை கண்டிக்காதீர்கள். ஓரளவு கட்டுப்படுத்துங்கள். அனைவரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நம்மை பின்பற்றி நேர்மையானவர்களாக விளங்குவர். எல்லா சூழலிலும் சட்டத்தை மதிக்க வேண்டும். அதன் மூல் சிறிது சிறிதாக நாட்டில் முழுமையான சட்டத்தின் ஆட்சி வரும். அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாலே மகிழ்ச்சியாக அமையும். முன்னாள் மாணவர்கள், நண்பர்களில் சிரமப்படுபவர்களை கை தூக்கி விட வேண்டும்,'' என்றார். பொருளாளர் வஞ்சிக்கோ, முதல்வர் மாரீஸ்குமார், சுயநிதிப்பிரிவு இயக்குனர் அசோகன், துணை முதல்வர் ஜெயக்கனி பேசினர்.