/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியை புறக்கணிக்கும் டாக்டர்கள் : ஊதியம் உயர்த்த ஏற்பாடு
/
மாநகராட்சியை புறக்கணிக்கும் டாக்டர்கள் : ஊதியம் உயர்த்த ஏற்பாடு
மாநகராட்சியை புறக்கணிக்கும் டாக்டர்கள் : ஊதியம் உயர்த்த ஏற்பாடு
மாநகராட்சியை புறக்கணிக்கும் டாக்டர்கள் : ஊதியம் உயர்த்த ஏற்பாடு
ADDED : ஜூலை 29, 2011 01:32 AM
மதுரை : ஊதியத்தை காரணம் காட்டி, மதுரை மாநகராட்சி மருத்துவனையை டாக்டர்கள் புறக்கணித்து வருவதால், பொதுமக்கள் சிகிச்சை பெற சிரமப்படுகின்றனர்.
மதுரையில் 47 மாநகராட்சி மருத்துவமனைகள் உள்ளன. இதில் புதூர், மகபூபாளையத்தில் 24 மணி நேர மருத்துவனைகள் செயல்படுகின்றன. தவிர மகப்பேறு மருத்துவமனைகளையும் உள்ளன. இங்குள்ள சிகிச்சையை ஏராளமானோர் நம்பி உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறையால், மாநகராட்சி மருத்துவமகைள் பயனின்றி இயங்கி வருகின்றன. 15 டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், நியமனத்திற்கான நேர்முகத்தேர்வை டாக்டர்கள் புறக்கணிக்கின்றனர்.
ஐந்து டாக்டர் இருக்க வேண்டிய 24 மணி நேர மருத்துவமனையில், ஒருவர் மட்டுமே உள்ளனர். ஊதிய பிரச்னையே, டாக்டர்களின் பற்றாக்குறைக்கு காரணம். அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாநகராட்சி மருத்துவமனையில் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவே புறக்கணிப்பிற்கு காரணம். பொதுமக்கள் நலன் கருதி, போதிய டாக்டர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊதியத்தை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து அரசுக்கு கடிதம் அனுப்பவும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது: பொதுமக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கும் விதமாக டாக்டர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளோம். ஊதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம், என்றார்.

