/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நூறு நாள் திட்ட பணியில் பாம்பு கடித்து பெண் பலி
/
நூறு நாள் திட்ட பணியில் பாம்பு கடித்து பெண் பலி
ADDED : ஆக 02, 2011 01:20 AM
திருவேடகம் : நூறுநாள் வேலை திட்டத்தில் கால்வாயை தூரும் வாரும் பணியில் ஈடுப்பட்ட பெண் பாம்பு கடித்து பலியானார்.
திருவேடகம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து கால்வயை தூர்வாரும் பணியில் அதே ஊரை சேர்ந்த பெரியண்ணன் மனைவி கமலா(40) ஈடுபட்டார். புதரில் உள்ள செடியை பறிக்கும்போது கட்டுவிரியன் பாம்பு கடிக்க, கமலா பயந்து சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் பாம்பை தடியால் அடித்து கொன்றனர். திருவேடகம் ஊராட்சி தலைவர்
ராமுஅம்பலம் ஆம்புலன்சில் கமலாவை அனுப்பினார், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கமலா இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரணை செய்தனர்.