sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் நிதி முறைகேடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

/

கோயிலில் நிதி முறைகேடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலில் நிதி முறைகேடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலில் நிதி முறைகேடு: ஐகோர்ட் கிளை உத்தரவு


ADDED : ஆக 03, 2011 12:59 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில் நிதி முறைகேடு புகாரை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நாலுகோட்டையை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: நாலுகோட்டை அருகே மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் இக்கோயிலுக்கு ஏராளமான நிதி வழங்குகின்றனர். ஆதிநாராயணன், வெள்ளைச்சாமி ஆகியோர், அறங்காவலர் எனக்கூறி கொண்டு, கோயில் நிதியை கையாளுகின்றனர். இவர்கள் அறநிலையத்துறையினரால் நியமிக்கப்படவில்லை. மேலும் நிதியை கோயில் பணிகளுக்கு செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டுள்ளனர். இங்கு நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், ''நிதி முறைகேடு குறித்த மனுதாரர் 2010 மே 4ல் வழங்கிய மனுவை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டது.










      Dinamalar
      Follow us