sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குடிபோதை தகராறு : அண்ணன் கொலை தம்பி கைது

/

குடிபோதை தகராறு : அண்ணன் கொலை தம்பி கைது

குடிபோதை தகராறு : அண்ணன் கொலை தம்பி கைது

குடிபோதை தகராறு : அண்ணன் கொலை தம்பி கைது


ADDED : ஆக 15, 2011 01:48 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பை-பாஸ் ரோடு சொக்கலிங்க நகரில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை கழுத்தில் குத்தி கொலை செய்த புதுமாப்பிள்ளையான தம்பியை போலீசார் கைது செய்தனர்.மதுரை பை-பாஸ் ரோடு சொக்கலிங்கநகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் கண்ணன்,32.

பெயின்டிங் கான்ட்ராக்டர். இவருடைய மனைவி கருத்து வேறுபாட்டால், நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றார். மன வேதனையில் கண்ணன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இவருடைய தம்பி செந்தில், 29. ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக இருந்தார். இவருக்கு நேற்று காலை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கண்ணன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார்.இரவு 8.45 மணிக்கு மீண்டும் போதையில் செந்திலிடம் தகராறு செய்தார். ஆத்திரத்தில் கண்ணன் கழுத்தில் செந்தில் கத்தியால் குத்தினார். கண்ணனின் கழுத்து நரம்புகள் துண்டானதில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் இரவு 10.45 மணிக்கு கண்ணன் இறந்தார். செந்திலை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us