sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருவாதவூர் மதுக்கடையை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

/

திருவாதவூர் மதுக்கடையை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

திருவாதவூர் மதுக்கடையை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

திருவாதவூர் மதுக்கடையை மாற்ற மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஆக 15, 2011 01:51 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் திருவாதவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.மதுக்கடை ஏற்கனவே மாணிக்கவாசகர் தெருவில் இயங்கியது.

தற்போது கடையை மதுரை மெயின் ரோட்டில் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகில் மாற்றியுள்ளனர். இதனால் மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அருகில் பஸ் ஸ்டாப், மருத்துவமனை போன்றவை உள்ளன. மாலை நேரங்களில் மதுக்கடைக்கு வரும் குடிமகன்களால், அந்த வழியாக பெண்கள், நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. ஏற்கனவே மதுக்கடையை வேறு இடத்திற்கு அகற்ற கோரி ஐகோர்ட் கிளை வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் கிளையும், கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. இருப்பினும் கடை மாற்றப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாணவர்கள், கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர்.










      Dinamalar
      Follow us