/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வனத்தை பாதுகாக்க தேவை கூடுதல் பணியாளர்கள் : சம்பள உயர்வில் முரண்பாடு
/
வனத்தை பாதுகாக்க தேவை கூடுதல் பணியாளர்கள் : சம்பள உயர்வில் முரண்பாடு
வனத்தை பாதுகாக்க தேவை கூடுதல் பணியாளர்கள் : சம்பள உயர்வில் முரண்பாடு
வனத்தை பாதுகாக்க தேவை கூடுதல் பணியாளர்கள் : சம்பள உயர்வில் முரண்பாடு
ADDED : செப் 04, 2011 01:21 AM
மதுரை : உலகம் வெப்பமயமாதல், சுனாமி, பனிமலை உருகுதல், பருவமழை தவறுதல், அதிகமழையால் சேதம்; இதற்கு ஒரே தீர்வு வனப்பரப்பை அதிகரித்தல்.
மற்ற துறைகள் மனித மேம்பாட்டிற்கு மட்டும் இயங்குகின்றன. ஆனால், வனத்துறை மட்டுமே உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க, மேம்படுத்த பாடுபடுகிறது.
மனிதனால் தாவரங்கள் உட்பட இதர ஜீவராசிகளுக்கும், விலங்குகளால் மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுப்பது வனத்துறையின் சீரிய பணி. இதில் 6,000 பேர் பணிபுரிகின்றனர். வனத்துறை களப்பணியாளர்கள் நீண்டகாலமாக காவல்துறைக்கு இணையான சம்பளம், படிகள் கோரி வருகின்றனர். ஆனால், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இன்ஸ்பெக்டர்களுக்கு இணையாக வனச்சரகர்கள் 5,100 ரூபாய் கிரேடு சம்பளம் பெறுகின்றனர். வனவர்-எஸ்.ஐ., வனக்காப்பாளர்- ஏட்டு, வனக்காவலர்/ மாலி-முதல்நிலை காவலர் பணிக்கு இணையானது. ஆனால், போலீசுக்கும், வனவர் 400, வனக்காப்பாளர் 500, வனக்காவலர்/ மாலிக்கும் 350 ரூபாய் கிரேடு சம்பளம் வித்தியாசம் உள்ளது. இத்துறையில் 2012 ல் அதிக பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் வனப்பகுதி 21 ஆயிரம் ச.கி.மீ. இதை பாதுகாக்க, வனவளத்தை அதிகரிக்க வனக்காவலர்கள், வனக்காப்பாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். தற்போது களப்பணியாளர்களுக்கு மாதம் 60 ரூபாய் பணி ஆபத்துப்படி (ரிஸ்க் அலவன்ஸ்) வழங்கப்படுகிறது. காவல்துறையில் பதவி வாரியாக இது வழங்கப்படுகிறது. அதிக மழை பெய்யும் பகுதிகளில் அட்டை, வறண்ட பகுதிகளில் பூச்சிக்கடி வாங்காத வன களப்பணியாளர்கள் இருக்க முடியாது. நர்சு, கால்நடை உதவி ஆய்வாளர்களுக்கு அதிகம் கிடைக்கிறது. வனத்துறையில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மாதம் 300 ரூபாய் பணி ஆபத்துபடி வழங்க வேண்டும்.
வனவேலைகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டியவை. மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நட்டு முடிக்க வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத்தான் பெரிதும் நம்ப வேண்டியுள்ளது. அப்போது விவசாய பணியும் நடக்கிறது. வனவேலைகளுக்கு போதுமான கூலியாட்கள் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச கூலிச் சட்டப்படி ரூ.119.85 முதல் 125.85 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக தூரம், பயண நேரம் அதிகரிப்பால் வனவேலையில் 5 மணி நேரத்திற்கு 200 முதல் 250 ரூபாய் கூலியாட்கள் கேட்கின்றனர். அந்தந்த பகுதிகளுக்கு வனப்பாதுகாவலர் தலைமையில் குழு அமைத்து, கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முகமது ஜக்காரியா வலியுறுத்தியுள்ளார்.