sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை காமராஜ் பல்கலையில் வேலைதரும் புதிய படிப்புகள்

/

மதுரை காமராஜ் பல்கலையில் வேலைதரும் புதிய படிப்புகள்

மதுரை காமராஜ் பல்கலையில் வேலைதரும் புதிய படிப்புகள்

மதுரை காமராஜ் பல்கலையில் வேலைதரும் புதிய படிப்புகள்


ADDED : செப் 08, 2011 01:51 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் உள்ள பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து, வேலைவாய்ப்பு தரும் புதிய படிப்புகள் துவங்க திட்டமிடப்படுகிறது.

இப் பல்கலையில் 73 துறைகள் உள்ளன. 39 முதுநிலை பாடபிரிவுகள், 31 எம்.பி.பில்., பிரிவுகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதில் பல பாடபிரிவுகள் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் இல்லை. பல மாணவர்கள் முதுநிலை பாடபிரிவுகளை 'ஸ்காலர்ஷிப்' பெறுவதற்காகவே தேர்வு செய்து படிக்கின்றனர். பல்கலை தனி அதிகாரி ஜெயராமன் கூறியதாவது: மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஒவ்வொரு துறைகளும் தனியாக இல்லாமல், இணைந்து செயல்படும் வகையில் புதிய படிப்புகள் மற்றும் பாடதிட்டங்கள் உருவாக்குவது குறித்து திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து துறைகளிலும் ஆலோசனை நடந்து வருகிறது. இதன் மூலம் தற்போது செயல்படும் ஒரு துறைக்கு தொடர்புடைய, மற்ற துறைகள் சார்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பல்கலையின் இந்த முயற்சியால் மாணவர்கள் ஒரு துறை சார்ந்த கல்வியை மட்டுமின்றி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய பல துறை சார்புடைய கல்வியறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் மாணவர்களின் திறனை வளர்ப்பதுடன், எளிதாக வேலை வாய்ப்பை பெறமுடியும், என்றார்.








      Dinamalar
      Follow us