sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகள் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவு

/

ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகள் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவு

ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகள் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவு

ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகள் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவு


ADDED : செப் 08, 2011 01:53 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையில் விசாரிக்க தடை கோரிய வழக்கு குறித்து பதிலளிக்க ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டது.

மதுரை மாவட்டம் எட்டிமங்கலம் வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில் தென்தமிழகத்திலுள்ள 13 மாவட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை சிலர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். அதை சென்னை ஐகோர்ட்டும் விசாரிக்கிறது. இதனால் ஐகோர்ட் கிளை துவக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை மதுரையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரினார். நேற்று நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கு சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், ஐகோர்ட் கிளை பதிவாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு செய்யும்படி அவர்களது வக்கீல் பழ.ராமசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்., 14க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று இறுதி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும், என்றனர்.










      Dinamalar
      Follow us