/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,வினரை ஜாமினில் விட கோர்ட் மறுப்பு
/
தி.மு.க.,வினரை ஜாமினில் விட கோர்ட் மறுப்பு
ADDED : செப் 09, 2011 01:38 AM
மதுரை : மதுரையில் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் கைதான தி.மு.க., திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், அவனியாபுரம் நகர செயலாளர் இப்ராகிம்சேட்டை ஜாமினில் விட முதன்மை செஷன்ஸ் கோர்ட் மறுத்து விட்டது.
இக்கொலை வழக்கில் கார்த்திகேயனும், இப்ராகிம்சேட்டும் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களது ஜாமின் மனு நேற்று நீதிபதி(பொறுப்பு)ராஜ சேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அவர்களது வக்கீல்கள் மோகன்குமார், குபேந்திரன் வாதிடுகையில், ''அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு வக்கீல் தமிழ்செல்வன், ''கொலை சம்பவத்தில் இருவருக்கும் முக்கிய தொடர்புள்ளது. இருவரையும் போலீசார் காவலில் எடுக்கவுள்ளனர். ஆவணங்களை கைப்பற்ற வேண்டியுள்ளது. ஜாமினில் விட கூடாது,'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். மனுதாரர்களை போலீசார், காவல் கோரவுள்ளதால், ஜாமினில் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.