/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா
/
மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா
ADDED : செப் 29, 2011 01:44 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி கலை விழா நேற்று துவங்கியது.
அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரத்தினசபாபதி, அவிநாசிநாதர் குழுவினர் திருமுறை இசை, மாலா, அர்ச்சனா குழு பரதநாட்டியம், மதுமிதா மிஸ்ரா ஒடிசி நடனம், பேராசிரியர் ஞானசம்பந்தன் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தக்கார் கருமுத்து தி.கண்ணன், செயல் அலுவலர் ஜெயராமன் பங்கேற்றனர். இன்று மாலை 5 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர், நாளை ஊஞ்சல், அக்.,1 மேருவைச் செண்டால் அடித்தல், 2- மீனாட்சி பட்டாபிஷேகம், 3-பார்வதி திருக்கல்யாணம், 4- மஹிஷாசுரமர்த்தினி, 5- சிவபூஜை அலங்காரங்களில் அம்மன் காட்சியளிக்கிறார். இந்நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இசைக்கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. அக்.,6 விஜயதசமி அன்று 108 வீணை இசையுடன் விழா நிறைவடையும்.